ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல்.


ஆண்டிபட்டி, நவ.29

 தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனுக்களை அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் மற்றும்  கம்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மனும் ஆண்டிபட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான லோகிராஜன், ஒன்றிய குழு துணை தலைவரும் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான வரதராஜன் ஆகியோரிடம்  விருப்ப மனுக்களை வழங்கினர் . விருப்ப மனுக்களுக்கு நபர் ஒன்றுக்கு ரூபாய் 1500 செலுத்தி பதிவு செய்து கொண்டனர் .இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, விருப்ப மனுக்களை அளித்தனர்.

தேனி செய்தியாளர்

சிவபாலன்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்