தாராபுரத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி
திருப்பூர்: சாலக்கடை பாலத்தில் முன்னே சென்ற வாகனத்தை முந்திச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து குப்புற கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் வழியாக கோவை நோக்கி வேகன்ஆர் வாகனம் சென்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தை நாகராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.
அதில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், குலசேகர பட்டினம் தெருவைச் சேர்நத ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம் (61) அவரது சகோதரி பிரேமலதா (45) மற்றும் பிரேமலதா மகள் சுபத்ரா ஆகியோர் பயணம் செய்தனர்
அவர்களது வாகனம், முன்னே சென்ற வாகனத்தை முந்திச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து குப்புற கவிழ்ந்தது.
இதில் கல்யாணசுந்தரம், பிரேமலதா ஆகியோர் பலியானார்கள். டிரைவர் நாகராஜூம் பலியானார்.
கோவை வேளாண் கல்லூரியில் படித்து வரும் சுபத்ராவை கல்லூரி விடுதியில் விடுவதற்காக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. பலியான கல்யாணசுந்தரம் மற்றும் பிரேமலதா ஆகியோர் சகோதரர்கள்.
பிரேமலாதவின் மகள் சுபத்திரா (19) பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். மூலனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.