ஆன்லைனில் ‘ப்ரீ பயர்’ விளையாடும் குழந்தைகள் - பெற்றோர் கண்காணிக்க எஸ்.பி.ஜெயக்குமார் வேண்டுகோள்.!


ஆன்லைனில் ‘ப்ரீ பயர்’, ரம்மி போன்ற விளையாட்டுக்கள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் வைத்திருக்கும் பணத்தைதிருடி செல்போனில் இணையதளத்திற்கு செலவு செய்து "ப்ரீபயர்” போன்ற ஆன் லைன் விளையாட்டுக்களில் விளையாடி வருவதாக போலீஸ் துறைக்கு தகவல்கள் வந்துள்ளன.

இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் சிறுவர்கள் தங்களை அறியாமல் மூழ்கி தங்களது படிப்பையும், நேரத்தையும் வீணடித்து வருகின்றனர். இது அவர்களது உடல் நலத்தையும், வாழ்க்கை யையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். மேலும் வாலிபர்கள் உள்பட பலர் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட் டுக்களில் விளையாடி விட்ட பணத்தை பெற்று விடலாம் என்று மேலும், மேலும் வட்டிக்கு கடன் வாங்கி விளையாடி தற் கொலை செய்து வருவதை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

எனவே, பொதுமக்கள் தங்களது பிள்ளைகள் மீது அடிக்கடி கவனம் செலுத்தி இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களில் தங்களது பணத்தை இழக்காமல் இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடாமல் தவிர்க்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்