ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பங்கேற்பு.!*


கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் உள்ள இல்லத்துப் பிள்ளைமார் இளைஞர் சமுதாயத்துக்கு சங்கத்துக்கு பாத்தியப்பட்ட ஆறுமுகமங்கலம் வழியில் வந்த ஐகோர்ட் ஸ்ரீ மகாராஜா அருள்மிகு ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. 

கடந்த 18ம் தேதி அன்று கால் வைத்த விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 4 மணி அளவில் ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் தீர்த்தம் குடம்  எடுத்து வந்து மேளதாளங்கள் முழங்க மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு தீபாராதனைகள்  முளைப்பாரி ஊர்வலம், நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து சாமக் கொடை, பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ‌இதில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

நிகழ்ச்சியில் வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் தலைவர் மகேஷ் பாலா, செயலாளர் சோலை, பொருளாளர் மாரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், முன்னாள் கவுன்சிலர் ஆரோக்கியராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி