அசத்தல் வெற்றி பெற்ற அமமுக.!: 33 நகராட்சி வார்டுகளில் வெற்றி - ஒரத்தநாடு பேரூராட்சியையும் கைப்பற்றியது


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக மாநகராட்சியில் 3, நகராட்சிகளில் 33, பேரூராட்சிகளில் 66 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை, தஞ்சை, திருச்சி மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டில் அமமுக வென்றுள்ளது; தஞ்சை ஒரத்தநாடு பேரூராட்சியையும் அமமுக கைப்பற்றியது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, சென்னை, தஞ்சாவூர், திருச்சி மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டு,33 நகராட்சி வார்டுகள், 66 பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 102 வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுககைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பதிவில், “ உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் பணபலமும், அதிகார பலமும்தான் கொடிகட்டிப் பறக்கும் என்பது தெரிந்திருந்தாலும், ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளைகளாக, நெஞ்சுரத்துடன் களம்கண்ட அமமுக வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காகப் பணியாற்றிய தொண்டர்களுக்கும், வெற்றி வாகை சூடியவர்களுக்கும் எனதுமனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழக மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும்வரை உத்வேகத்துடன் நம் பணியைத் தொடர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்