லத்தேரி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி ஆனி விஜயா வருடாந்திர ஆய்வு


வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி காவல் நிலையத்தில்  வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின் போது  காவல் நிலையத்தில் உள்ள மரக்கன்றுகள், சுற்றுசூழல் ஆகியவை பார்வையிட்டார். 

பின்னர் காவல் நிலையத்தில் உள்ள  கோப்புகளை,  சரிப்பார்த்தார். இதனை தொடர்ந்து காட்பாடி டி.எஸ்.பி பழனி, இன்ஸ்பக்டெர் சுப்பிரமணி உள்ளிட்ட காவல் நிலையத்தில் உள்ள போலிசாரிடம்  குறை, நிறைகளை கேட்டறிந்தார். ஆய்வின் முடிவில் நிருபர்களிடம் கூறியதாவது: 

காவல் நிலையங்களில் உள்ள போலிசார் எப்போதும் குற்றங்களை கண்காணிக்கும் நோக்கத்தோடு பணியாற்ற வேண்டும் , காவல் நிலைய தேவை, காவலர்களின் தேவை, விசாரணை முறையை துரிதப்படுத்த போலிசார் முன்வர வேண்டும். 

இதனை தொடர்ந்து பேசிய அவர் காவல் நிலையத்தின் தரம், காவலர்களின் விசாரணை முறை, பொதுமக்களிடம் அனுகும் முறை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் அவசியமறிந்து சுமார் 15 நாட்களுக்குள் வழக்குகளை  முடிக்க வேண்டும்.

காவல் நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய வேண்டும். காவல் நிலையத்தில் பணிபுரியும் இருபால் காவலருக்கும் உண்டான பிரச்சினைகள் ஏதாவது இருப்பின் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் கொடுக்கும் வரும் பொதுமக்களை முறையாக அனுக வேண்டும்.காவல் நிலையங்களில் உள்ள குறை நிறை குறித்து கேட்டதற்கு,காலதாமதமாக வரும் நீதியால் குற்றவாளி தப்பிக்க நேரடும். எனவே  புகார்களின் மீதான விசாரணையை விரைவாக முடிக்க போலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

லத்தேரி, பணமடங்கி ஆகிய காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாகுறை இருப்பினும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.சட்டம் எப்போதும் தங்கள் கடமை செய்யும். என்று அவர் பேசினார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்