தூத்துக்குடி மேயராக பதவியேற்கவுள்ள ஜெகன் பெரியசாமிக்கு ஐஜேகே தென் மண்டல இணைச்செயலாளர் அருணாதேவி வாழ்த்து.!


தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 50 இடங்களில் வெற்றி பெற்றது. 

சுயேட்சையாக வெற்றி பெற்றவர்களில் 3 பேர் கனிமொழி கருணாநிதி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மாநகராட்சி திமுக கூட்டணி பலம் 53ஆக உயர்ந்துள்ளது. இதில் 20வது வார்டில் வெற்றி பெற்ற திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமிக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வருகின்ற 4ம் தேதி மேயராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவரது அலுவலகத்தில் இந்திய ஜனநாயக கட்சி தென்மாநில இணைச்செயலாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் பூங்கொத்து கொடுத்து நிர்வாகிகளுடன் வாழ்த்து தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் சுசி.ரவீந்திரன், தலைமை பேச்சாளர்கள் இருதயராஜ், சரத்பாலா, தமிழன்பண், மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் ராமர், 

போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் லிங்கராஜா, பிரபாகர், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இம்மானுவேல், மற்றும் குமார், மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்