காவனூர் அருகே வேப்ப மரம் மற்றும் வேலமரம் திருட்டு - கே வி குப்பம் போலீசார் விசாரணை.!*
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா காவனூர் பாலாற்றுக் கரை ஓரம் வேலமரம் மற்றும் வேப்பமரம் மர்மநபர்கள் வெட்டி கடந்த சில நாட்களாக திருடிச் சென்றுள்ளனர். விஏஓ கலைவாணி கே வி குப்பம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து மர்ம நபர்கள் யார் என்று கே வி குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்