கோவில்பட்டி அருகே சிறிய ஓடையில் கவிழ்ந்த அரசு பஸ் - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்.!


கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு இளையரசனேந்தல் கொளக்குட்டான்குறிச்சி வழியாக அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் வழக்கம் போல அந்த அரசு பஸ் கழுகுமலைக்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு, 

பின்னர் கோவில்பட்டிக்கு கிளம்பியுள்ளது. பஸ்சில் மிக குறைவான பயணிகள் தான் இருந்துள்ளனர். இந்த நிலையில் கோவில்பட்டி அருகே வெங்கடசலாபுரம் அருகே பஸ் வந்த போது, மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். 

மூதாட்டி மீது மோதமால் இருக்கும் வகையில் டிரைவர் பஸ்சினை திருப்ப முயன்றுள்ளார். ஆனால் பஸ் நிலை தடுமாறி அருகில் இருந்த சிறிய ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை..

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்