திருச்செந்தூரில் கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருடியவர் 24 மணி நேரத்தில் கைது - 9 செல்போன், 2 கைக்கணிணிகள் பறிமுதல்.!


திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சரவணன் (31) என்பவர் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் தெற்குரத வீதியில் சொந்தமாக செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 29.03.2022 அன்று காலை கடையை திறக்க வந்தபோது, 

அங்கு மர்மநபர்கள் கடையின் பித்தளை பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த செல்போன்களை திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலாஜி சரவணன்  திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில்  சரவணனின் செல்போன் பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து செல்போன்களை திருடியது திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் திலீப் (எ) திலீப்குமார் (27) என்பவர் என்பது தெரியவந்தது.

 உடனடியாக மேற்படி போலீசார் எதிரி திலீப் (எ) திலீப்குமாரை இன்று (30.03.2022) கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 95,000/-- மதிப்புள்ள 2 புதிய செல்போன்கள், 7 பழைய செல்போன்கள் மற்றும் 2 கைக்கணிணிகள் (Tab) ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!