சொத்து வரி கட்டாததால் சென்னை ஆல்பர்ட் திரையரங்கு ஜப்தி -மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத சென்னையின் பிரபல ஆல்பர்ட் திரையரங்கை சென்னை மாநகராட்சி சீல் வைத்து ஜப்தி செய்தது.

2021 - 22ம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் கட்ட தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் பல ஆண்டுகளாக சொத்து வரியையும் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததாகவும் சென்னை பெருநகர மாநகராட்சி தரப்பில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத காரணத்தினால், திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்து இருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம்.

அதன்படி 51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன் படி ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்