லாரி மீது கார் மோதியதில் திருப்பூரை சார்ந்த இருவர் பலி...

 வாளையார் ஆர்டிஓ., சோதனைச் சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இன்னோவா கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

 திருப்பூர் கூத்தம்பாளையம் அண்ணாநகர் வடக்கு பகுதியை சேர்ந்த பாலாஜி (49), முருகேசன் (47) இவர்களது நண்பர் பத்ருதீன் (40), டிரைவர் மைனுதீன் (38) ஆகியோர்  திருப்பூரில் பனியன் வியாபாரம் செய்து வருகின்றனர்.  வணிக நிமித்தமாக திருப்பூர் வந்த வெளிநாட்டினரை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு  இன்று அதிகாலை அவர்கள் திருப்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

 அப்போது விபத்து ஏற்பட்டது. கோவை பாலக்காடு எல்லையான வாளையாறு செக்போஸ்ட் அருகில் வந்த போது அதிகாலை 5.45 மணிக்கு எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த இன்னோவா கார் நின்று கொண்டுவிருந்த லாரி மீது மோதியது. இதில் பாலாஜி (49), முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.பத்ருதீன் (40), டிரைவர் மைனுதீன் (38) ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.  அவர்கள் கோவை மற்றும் வாளையார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  இறந்தவர்களின் உடல்கள் பாலக்காடு மாவட்ட மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் திருப்பூரை சேர்ந்த இருவர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி