பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளவும் அழைப்பு


தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில்  இந்தியப் பிரதமர்நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். மேலும் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

அவர் அளித்துள்ள கோரிக்கை விவரங்கள் வருமாறு:

*காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான  பிரச்சனை     

* பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்  

* கச்சத்தீவு மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது     

* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான இரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்யக் கோருதல்  

*ரெய்கார் - புகழூர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவித்தல்

* மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்வது  

* ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல்     

* மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிர்ப்பு  

* உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிதல்.     

* பிரதம மந்திரி வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு (PMFBY) ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்துதல்.      

* காலணி உற்பத்தியில் பிஎல்ஐ (PLI) திட்ட அறிமுகம் , டிடிஐஎஸ் (DTIS) திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை ஒதுக்கீடு  

* தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆய்வுக்கூடம் அமைத்தல் , சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்கப்படுதல் , மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் (MMLP) வரை ரயில் பாதை அமைத்தல்.   

* பள்ளிக்கல்வி தேசிய கல்வி கொள்கை -2020    

* சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - II- இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல்    

* பிற்படுத்தப்பட்டோர் நலன் 2022ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக  சென்னையை அறிவிக்கக் கோரிக்கை    

* இலங்கை தமிழர் பிரச்சினை-ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் , இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக.     

* தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள்    

*நியூட்ரினோ ஆய்வக (INO) திட்டத்தை கைவிடக் கோரிக்கை, கூடங்குளம் அணுமின் திட்டம் - செலவழித்த அணு எரிபொருள் நீக்குதல் தொடர்பாக (SNF)    

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் நரிக்குறவர்கள்/குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல்    

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என கூறினார். டெல்லியில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகத்தின் வழியாக உதவிகளை வழங்க ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தாா். இலங்கையின் வட, கிழக்கு பகுதிகளில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவிகளை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!