திரேஸ்புரம் பகுதி திமுக சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி விறுவிறுப்பாக தொடங்கியது.!



தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திரேஸ்புரம் பகுதி திமுக மற்றும் பீச் பாய்ஸ் கபாடி கழகம் இணைந்து நடத்தும் 


மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தூத்துக்குடி லுர்தம்மாள்புரம் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் தொம்மை சேசுவடியான் திடலில் இன்று விறுவிறுப்பாக தொடங்கியது. 


இப்போட்டியில் வெற்றி பெரும் அணிகள் நாளை  ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடுகின்றனர். முதல் நாள் போட்டியில் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம்,

மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், தொழிற்சங்க தலைவர் ராஜு, தொண்டரணி தலைவர் ராஜா, திமுக இலக்கிய அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், கவுன்சிலர் பவாணி மார்ஷல், திமுக வட்டச்செயலாளர்கள் தினகரன், கருப்பசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.  


இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசுகளும் வழங்குகிறார்கள். 

இதற்கான ஏற்பாடுகளை திரேஸ்புரம் பகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மற்றும் பீச் பாய்ஸ் கபாடி கழகம் இணைந்து செய்து வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்