தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பகுதியில் ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு!

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் செயல்பட்டு வரும் திட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளரும், தூத்துக்குடி மாவட்ட மண்டல அலுவலர் ஊரக வளர்ச்சி துறை (பொறுப்பு) கவிதா ஆய்வு செய்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை அலகு உற்பத்தி செய்யப்படும் உர அலகினை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு பணி செய்யும் பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.

அதன் பின்னர், ஊராட்சி அலுவலகம் சென்று அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பணிகள் குறித்து கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொது மயானத்தில் மின்சார எரியூட்டி தகனம் இடத்தினை பார்வையிட்டு மேலும், இதனை செம்மைப்படுத்திட கேட்டுக்கொண்டார். பின்னர் மாப்பிளையூரணி ஊராட்சி பகுதியில், சாலைகளில் பேவர் பிளாக் அமைக்க இருக்கும் இடத்தினையும் பார்வையூட்டார்.

இந்த ஆய்வில், ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் (தூத்துக்குடி உபகோட்டம்) அமலா ஜெசி ஜாக்குளின், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ்,  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மகேஸ்வரி, மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், பொறியாளர் தளவாய், மாவட்ட ஒருக்கினைப்பாளர் (தூய்மை பாரத இயக்கம்) செந்தில்குமார், தனி மேற்பார்வையாளர் முத்துராமன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் கவுதம், சுதாகர், ராமச்சந்திரன், உட்பட பலர் இருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!