தாளவாடியில் இருந்து கர்நாடகாவிற்கு டூவிலரில் கடத்தபட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

    தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்க்கு டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் டூவிலரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து  அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தாளவாடி நேதாஜி சர்க்கிளை சேர்ந்த  மாதேஷ்(47) என்பதும், குறைந்த விலைக்கு தாளவாடி பகுதியில் ரேசன் அரிசி வாங்கி, கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து ரேசன் அரிசி கடத்திய மாதேஷ் மீது வழக்கு பதிவு செய்து,மொபட்டில்  இருந்த 150கிலோ ரேசன் அரிசி  மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Attachments area

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்