பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசு வாட் வரி குறைக்க வேண்டும் - இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் கோரிக்கை

   பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசு வாட் வரி குறைக்க வேண்டும் இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் கோரிக்கை.

 இந்து முன்னேற்ற கழக அலுவலகத்தில் மாநில தலைவர் வக்கீல் கோபிநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தஞ்சாவூர்  தேர் தீ விபத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன், கோவில் திருவிழாவில் பாதுகாப்பு முக்கியமாகும். எனவே வருங்காலத்தில் கோவில் திருவிழாவிற்கு உள்ளுர் காவல்துறை, தீயணைப்பு துறை முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசு வாட் வரி குறைக்க வேண்டும். திவிரவாத செயலில் ஈடுபடும்  தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கூடாது. திருப்பூரில் பங்களாதேஷ், நைஜீரியன் ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து தொழில் துறையினருக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் . 

கோவில் நிலத்தில் அரசு பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தும்போது அரசு நிலத்தில் இருக்கும் கோவில்களில் அப்புறப் படுத்துவது கூடாது அதற்கு தமிழக அரசு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.  பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என்று எங்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது , உச்ச நீதிமன்றத்தில் ஹிஜாப் சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கான  தீர்ப்பு வழங்கிய பிறகு அதற்கான சட்ட நடவடிக்கை  பிறகு தொடங்கலாம் என்று எங்கள் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ஆனால்  உச்ச நீதிமன்றத்தில்  ஹிஜாப் எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் எங்கள் சார்பில் மீண்டும் ஹிஜாப் தடை கோரி  உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரபடும்  என்று கூறினார்.


     

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்