மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வேலை வழங்கிட வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AlYF) தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்.

எங்கே எனது வேலை ? என்ற முழக்கத்துடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர் பெருமன்றம் (AlYF) தமிழ்நாடு முழுவதும் இன்று (மே 31) முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறது .

இதனையொட்டி தூத்துக்குடியில் இன்று காலை  11.00 மணியளவில் தந்தி அலுவலகம் முன்பு இளைஞர் பெருமன்றம் (AlYF) சார்பில் அதன்  மாவட்ட செயலாளர் தோழர். பெ.சந்தனசேகர் வழக்கறிஞர், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாநிலகுழு உறுப்பினர்  வழக்கறிஞர் P. சீனிவாசன், மாவட்டத்தலைவர், M.மணிகண்டன், மாவட்ட பொருளாளர் R.சிவராமன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் மாநில செயலாளர் V.பாலமுருகன் துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் :- தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வழங்கிடவும், தமிழ்நாடு அரசு பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கே முழுமையாக வழங்கீடவும், ஒன்றிய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிடவும், பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு BNEGA சட்டத்தை நிறைவேற்றிடவும், ஓய்வு பெறும் அரசு பணியாளர்களின் வயது வரம்பு 60 ஆக உயர்த்தியதை மீண்டும் 58 ஆக மாற்றிடவும், தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக்கு சட்டம் நிறைவேற்றிடவும்,தற்காலிக,ஒப்பந்த, அவுட்சோர்சிங் முறையை தவிர்த்து பணி நியமனங்களை நிரந்தரமாக்கிடவும், சிறு மற்றும் குறுந்தொழில்களை தொடங்க இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கிடவும், பெண்களுக்கு சமவேலைக்கு சம ஊதியத்தை உத்திரவாதப்படுத்திடவும், வேலையில்லாக் காலத்தில் இளைஞர்களுக்கு வாழ்வூதியம் வழங்கிடவும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AlYF) தோழர்கள் M.பெருமாள், A. பேச்சிமுத்து சிங், A. ராஜா N. ராமசாமி, M.செண்பகமல்ராஜா வழக்கறிஞர், R.சோலையப்பன் V. கணேசகண்ணன், G.சூர்யா, ரகுராமன், P. சேகுவேரா, R.சக்தி, கரும்புசண்முகம், முத்துக்குமார், M. முத்து, M. மாரிமுத்து, Y. செல்வராஜ், S. ஐகோர்ட், மற்றும்  A. விக்னேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!