தூத்துக்குடி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் 19 தீர்மானம் நிறைவேற்றம் - மாநகராட்சி வளர்ச்சிக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மேயர் பேச்சு.!*


தூத்துக்குடி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேயர் கொண்டு வந்த 19 தீர்மானம் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள். 


கூட்டத்தில் மேயர் பேசுகையில் அனைத்து பகுதிகளும் முழுமையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரைவில் பணிகள் முடிவு பெறவுள்ளன. 

அதே போல் மாநகரில் பள்ளி செல்லும் குழந்தைகள் பகுதிகளில் புதிய தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. அனைவருடைய பகுதிகளிலும் அனைத்து பணிகளும் முழுமையாக நடைபெறுவதற்கு ஓத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு கவுன்சிலர் மூலம் குடிதண்ணீர் வரும் நேரம் தெரிவிக்கப்படுகிறது. 


வரும் 1ம் தேதி முதல் அதே போல் குப்பை எடுப்பதற்கான வாகனம் எந்த பகுதிக்கு எப்போது வரும் என்ற தகவல் கவுன்சிலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதற்கு பொதுமக்களிடம் கவுன்சிலர்கள் சொல்லவேண்டும்.

புறநகர் பகுதியின் வளர்ச்சிக்கும் முழுமையான பல ஓப்பதங்கள் போடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கும் 2023க்குள் அனைத்தும் முழுமை பெறும் வகையில் அதிகாரிகளும் பணி செய்து வருகின்றார்கள்.

மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி டிஜிட்டல் போர்டுகள் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு சென்றால் எனது பெயரையும் கவுன்சிலர் பெயரையும் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். 


தேவையற்ற விளம்பர பதாகைகள் அரசு சுவர்களில் ஓட்டுவதையும் தவிர்ப்பதற்கு நீங்கள் ஓத்துழைக்க வேண்டும். நானும் மாநகரின் வளர்ச்சிக்கு இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன். என்னோடு நீங்களும் இனைந்து வாருங்கள் மாநகராட்சி வளர்ச்சிக்காக என்று பேசினார். 

கூட்டத்தில் மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ், பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி பொறியாளர் ரூபன்சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, மற்றும் கவுன்சிலர்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி