தூத்துக்குடியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி - மேனாள் இஸ்ரோ தலைவர் சிவன், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.!


தமிழ்நாடு அரசு புதிதாக துவங்கியுள்ள, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், 'கல்லூரி கனவு' என்ற நிகழ்ச்சி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவ  மாணவியர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி தூத்துக்குடியில்  மாணிக்கம் மஹாலில் வைத்து  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் சமூக மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி மற்றும் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டு 


பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்வதில் உள்ள வாய்ப்புகள் குறித்த மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் மாணவ மாணவியர்களின் கேள்விகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதிலளித்தார். 


முன்னதாக, இந்திய வனத்துறை பணிக்கான தேர்வு 2021-ல் (UPSC2021) 57-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ள, தற்போது தூத்துக்குடி கோட்டத்தின் திருச்செந்தூர் ரேஞ்ச் வனச்சரகராகப் பணிபுரியும் சுப்புராஜ்க்கு பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துகளை தெரிவித்தனர்.


தொடர்ந்து மாணவ மாணவிகளின் உயர்கல்வி படிப்பதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்