படகில் இலங்கைக்கு கடத்தவிருந்த 4,430 வலி நிவாரண மாத்திரைகள் - க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல்!


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த ப்ரீகபலின் 150mg மாத்திரை சுமார் 443 அட்டைகளில்(4430) வலி நிவாரண மாத்திரைகள் வள்ளத்தையும் க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மாத்திரைகள் கடத்தல் நடக்க இருப்பதாக க்யூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவல் கிடைத்ததின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி, தர்மராஜ், சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.


அங்கு பதிவு எண் இல்லாமல் இருந்த வள்ளத்தை சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 443 அட்டைகளில்(4430) வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேற்படி வள்ளத்தில் உள்ளவர்கள் தப்பிசென்றதால் வள்ளத்தையும் பறிமுதல் செய்து, மாத்திரைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஓப்படைத்தனர். இதே போன்று கஞ்சா, புகையிலை, மஞ்சள், ஏலக்காய் களைக்கொல்லி மருந்து என கடத்தி வந்த நிலையில் தற்பொழுது மாத்திரைகளையும் கடத்துவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.


ப்ரீகபலின் 150mg மாத்திரை ஒரு வலிப்புத்தாக்க எதிர்ப்பு மருந்தாக உள்ளது. மற்றும் நரம்பு வலி, நடுக்கம், வலிப்பு மற்றும் ஃபைப்ரோமையால்ஜியா முதல் வரி சிகிச்சையில் கருதப்படுகிறது. 

இது நீரிழிவு நரம்பு வலி, வலிப்பு, தண்டுவட பாதிப்பு, ஓய்வற்ற கால் நோய் மற்றும் பொதுவான பதற்றக் கோளாறு சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!