புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் உறவு.! - விளாத்திகுளம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் சஸ்பெண்ட்.!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த தாண்டவம்.  இவர் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது அங்கு சொத்து பிரச்சனை தொடர்பாக 23.10.2019 தேதியில் கோமதி என்பவர்  புகார் அளித்துள்ளார். 

இது குறித்து விசாரணை நடத்திய ஆனந்த தாண்டவத்துக்கு கோமதி  உடன்  நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர். அப்போது கோமதியிடம்  6 லட்சம் பணம் பெற்றுள்ளார். இதனிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கோமதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் உறவினர்கள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கோமதி தனது வாழ்க்கையையும் பணத்தையும் பாதுகாத்து தருமாறு கடந்த ஏப்ரல் மாதம் டிஜிபி அலுவலகத்தில்  புகார் செய்தார். 

இது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மீதான புகாரில் குற்றச்சாட்டு ஊர்ஜிதமானது. இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவத்தை புதன்கிழமை இரவு சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்