தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள்.... இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி

அதிமுக , திமுக இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் என இந்து முன்னனி  மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்..

இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்  திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,  திராவிட அரசாங்கம் பெரியாரை பற்றி கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என பள்ளிகல்வி துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் , சுதந்திரம் வேண்டாம் என்றும் சொன்னவர் பெரியார். அவர் வரலாறை பாடத்திட்டத்தில் கொண்டு வர சதி திட்டம் உள்ளது. இதற்கு இந்து முன்னனி கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது என்று கூறினார். மேலும் , தமிழம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம். திருப்பூரில் 1200 இடங்களில் வைத்து வழிபட உள்ளோம். " பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் " என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது என்று தெரிவித்தார். திருப்பூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் , கோவையில் ஹச்.ராஜா போன்றோர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்றவர் ,
வீடுகளில் விநாயகர் சிலைகள் வைப்பதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்றும் கூறினார். 1983 ஆம் ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது முதலே அதிமுக , திமுக இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் , பங்களாதேஷ் போன்ற நாட்டிலிருந்து வருபவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள். திருப்பூர் போன்ற ஊர்களில் மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். தமிழகம் குறிவைக்கப்பட்டு , எந்நேரமும் கலவரம் வரும் என்ற சூழல் நிலவுகிறது. உளவுத்துறை சரிவர செயல்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!