திருப்பூர் பேருந்து நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும்... முக்குலத்தோர் தேசிய கழக மாநில செயற்குழு தீர்மானம்

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும் என்று நிறுவனத் தலைவர் எஸ். பி.ராஜா தலைமையில் நடந்த முக்குலத்தோர் தேசிய கழக மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

முக்குலத்தோர் தேசிய கழக மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் ஏ. பீ.டி.ரோட்டில் இன்று காலை நடைபெற்றது.
நிறுவன தலைவர் எஸ்.பி.ராஜா தலைமை தங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் கே.டி.சுரேஷ் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும். தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் ஜெயந்தி, வேலுநாச்சியார் விழா, பூலித்தேவன் விழாக்களில் 144 தடை உத்தரவை நீக்க அரசை கேட்டுக் கொள்வது. இந்த விழாக்களுக்கு செல்லும் வாகனங்களை அந்தந்த மாவட்டங்களில் அனுமதி வாங்கிட கேட்டுக் கொள்வது. திருப்பூர் உள்பட 13 மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும். என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த கூட்டத்தில் மாநில அவைத்தலைவர் கே.பொன்னுசாமி, மாநில மாணவரணி தலைவர் குடந்தை அருண்,  தென் மண்டல அமைப்பு செயலாளர் பாலா, திருப்பூர் மாவட்ட செயலாளர் எம். பிரபு, உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்