ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரம் மக்களை பிரிக்க கூடிய ஒன்றாக உள்ளது - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி.!


காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி ரயில் நிலையம் வருகை தந்தார்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகர தலைவர் முரளிதரன் தலைமையில், கட்சியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், இந்த பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இப்பொழுது நாட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு  இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரம் மக்களை பிரிக்க கூடிய ஒன்றாக உள்ளது. நாட்டில் வரலாறு காணாத வகையில் விலை வாசி உயர்ந்து இருக்கிறது.

அமெரிக்கர் டாலர் இப்போது 80 ரூபாய் வரை வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்ட நிலையில் உள்ளது. காரணம், தவறான பொருளாதார கொள்கை தான்,

விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் வருவதாக, மோடி சொன்னார் அதுவும் நடக்கவில்லை, இது அரசாங்கத்தின் தவறு, வீழ்ச்சி இதை மக்களிடம் எடுத்து கொண்டு சொல்ல இந்த பயணம் மேற்கொள்ளப்படும். 


பாஜக சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரப்படுத்தி வருகிறது இது தொடர்பாக செய்தியர்கள் கேள்வி எழுப்பியத்திற்கு,  அவர் கூறியதாவது, பாஜகவுக்கும் சுதந்திரதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் பங்கெடுத்து இருக்கிறார்கள்.

பாஜக இப்போதாவது சுதந்திரத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி, இவ்வளவு காலம் ஏன் பாஜக பங்கேடுக்கவில்லை. சுதந்திர தின நாள் அன்று ஏன் கொடி ஏற்றவில்லை. ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இதுவரை 2 தடவை மட்டுமே சுதந்திர கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது.

ஒன்று, நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது, பின்னர், வாஜ்பாய் பிரதமராக சென்ற போது இப்போது கொண்டாட கூடிய காரணம் என்ன? அப்போது கொண்டாடிய காரணம் என்ன? என பாஜகவிற்கு கேள்வி எழுப்பினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!