திருப்பூர் தெற்கு குறுமைய கூடைப்பந்து, ஹாக்கி வெற்றி பெற்றோர் விபரம்

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவியர்கள் கூடைப்பந்து & ஹாக்கி போட்டிகள்

இக்கல்வியாண்டிற்கான திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளை அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி நடத்துகிறது.

 14, 17 & 19 வயதிற்குட்பட்டோர்களுக்கான  மாணவியர்கள் கூடைப்பந்து போட்டிகள் மற்றும் ஹாக்கி போட்டிகள் ராக்கியாபாளையம், செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியில் நடைபெற்றது.  செஞ்சுரி பள்ளியின் முதல்வர் ஹெப்சிபா பால், துணை முதல்வர் ஆக்சிலியா மைக்கேல் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

கூடைப்பந்து போட்டிகள்

14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2 அணிகள் பங்கேற்றன. விவேகானந்தா பள்ளி அணி 24 : 06 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி அணியை வென்றது.

17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 6 அணிகள் பங்கேற்றன. செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி அணி 48 : 12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி அணியை வென்றது.

19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 4 அணிகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியில் பிரண்ட்லைன் அகாடமி பள்ளி அணி 25 : 20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் விவேகானந்தா பள்ளி அணியை வென்றது.

ஹாக்கி போட்டி முடிவுகள்

14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4 அணிகள் பங்கேற்றன. கிட்ஸ் கிளப் பள்ளி அணி 3 : 0 என்ற கோல் கணக்கில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி அணியை வென்றது.

17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4 அணிகள் பங்கேற்றன. செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி அணி 4 : 0 என்ற கோல் கணக்கில் பிரண்ட்லைன் அகாடமி பள்ளி அணியை வென்றது.

19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4 அணிகள் பங்கேற்றன. செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி அணி 5 : 0 என்ற கோல் கணக்கில் கிட்ஸ் கிளப் பள்ளி அணியை வென்றது. 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்