அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா; நடை பயணத்தில் 200 பேர்!


தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 40வது ஆண்டு ரூபி ஜூப்லி விழாவை முன்னிட்டு வ.உ.சி கல்லூரியில் இருந்து பழைய துறைமுகம் வரை Walkathon Race நடைபெறுகிறது.

இது குறித்து அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் தலைவர் தமிழரசு இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; 

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 27.09.2022 அன்று மாணிக்கம் மஹாலில் வைத்து ரூபி ஜீபிலி விழா வெகு விமரிசையாக நடத்தப்படவுள்ளது. 

விழாவின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வருகை தர உள்ளார். சிறப்பு அழைப்பாளர்களாக  சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  அமைச்சர் அனிதா R.ராதா கிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

விழாவின் தொடக்கத்தில் ஜீபிலி விழாக்குழுத் தலைவர் ஜே பிரகாஷ் வரவேற்புரையாற்றுகிறார். அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் T.R.தமிழரசு  தலைமையுரையாற்றுகிறார்கள். பின்னர், அநில இந்திய வர்த்தக தொழில் சங்கம் உருவாகுவதற்கு அரும்பாடுபட்ட மறைந்த முன்னாள் நிறுவனர்களை கௌரவிக்கும் விதமாக வர்த்தக தொழில் சங்க நிர்வாக குழு உறுப்பினர்களின் படத்திற்கு மாலை அணிவித்து கௌரவிக்கிறார்கள். 

மேலும் வர்த்தக சங்க நிறுவனர்களில் மிக முக்கிய பங்கு வகித்த AVMV.மணி அவர்களை தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  கௌரவிக்க நடள்ளார்கள். பின்னர் சிறப்பு விருந்தினர்கள் ஏலக்காய் மாலை அணிவித்தும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் கௌரவிக்க உள்ளார்கள்.

அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பாக தபால் கவர் மற்றும் தபால் தலை வெளியிடப்படவுள்ளது. அமில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 40 ஆண்டுகளில் உள்ள நிகழ்வுகளை புத்தக வடிவமாக தொகுத்து "Chronicle Coffee Table Book" வெளியிடப்படவுள்ளது. 

பின்னர் தூத்துக்குடியில் உள்ள சிறந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முலைவோர் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபர்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி விருது வழங்கும் நிகழ்வும். நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், வ.உ.சி துறைமுக ஆணையத்தின் தலைவர் Tராமசந்திரன், காத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் நிலைமை நிர்வாகியுமான கிருஷ்ணன், 

ஸ்பீக் தொழிற்சாலிையன் முழு நேர இயக்குநர் ராமகிருஷ்ணன். நாரங்கதாரா தொழிற்சாலையின் முந்த செயல் துணைத் தலைவர் சினிவாசன், தூத்துக்குடி SEPC அனல் மின் நிலையத்தின் Plant Hend நரேந்திரா, இன்டஸ்நாக் காஷ்ய இந்தியா நிறுவனத்தின் நிதி இயக்குனர் ராம பிரியன், மற்றும்

 அகில இந்திய வர்த்தக தொழில் சங்க முன்னாள் நலைவர்கள் ஜோ வில்லவராயர், AVMV.மணி, PSTS உதய சங்கர். PSTS.வேஸ்சங்கர் மற்றும் ஜோ பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள். இறுதியாக அகில இந்திய வத்தக தொழில் சங்கத்தின் பொதுச் செயலளர் சங்கர் மாரிமுந்து நன்றியுரையாற்றவுள்ளார்கள்.

40வது ஜூபிலி ஆண்டு விழாவினை முன்னிட்டு 25.09.2022(ஞாயிற்றுகிழமை) அன்ற்று சாலை 6.00 மணியளவில் வடசி கல்லூரி எதிரே அமைந்துள்ள MGR பூங்காவிலிருந்து ஆரம்பித்து தூத்துக்குடி பழைய துறைமுகம் முடிய சுமார் 200 பேர் நடைபந்தயத்தில்( Walkathon Race) கலந்து கொள்கின்றனர். அலை இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் தமிழரசு கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ளார்கள்


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி