தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ், பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு - தலைவர்கள் வரவேற்பு.!


தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்  கொள்வதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழலை சுட்டிக்காட்டி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்