17 பவுன் நகை, பணத்துடன் புதுமணப்பெண் மாயம்


மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (50).இவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது மனைவி மேகலா.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இதில் மூத்த மகன் நடராஜன் (30) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அபிநயா (28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன் அபிநயா திடீரென மாயமாகி உள்ளார்.

எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் நடராஜன் சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 40 நாட்களில் புது பெண் நகைகளுடன் மாயமானது தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்