திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள் திருப்பணி தொடக்க விழா

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் திருப்பணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த மூன்று கோவில்களும் இந்த பகுதி முழுக்க பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும்.

இந்த நிலையில் இந்த மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுரங்களுடன் கற்கோவில்களாக கட்டுவதற்கு செல்வவினாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். 


அந்த அடிப்படையில் செல்வ விநாயகர் மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணிகளை தொடக்கி வைத்தார். திருப்பணிக்காக பாலைக்கால் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பணிக்குழு தலைவர் இ.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். திருப்பணி குழுவினர் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றார்கள்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி