கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் சென்னை வந்தது

 உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் புனித யாத்திரைக்குச் சென்றபோது நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்தனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலா ரமேஷ், பிரேம்குமார் வாஞ்சிநாதன் மற்றும் சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டது.

இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் மூவர் உடலும் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மூவர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினருக்கு ஆறுதல் கூறி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இத எடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர்களின் வீடுகளுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்