ஈச்சர் லாரி மோதி வெங்காய வியாபாரி பலி

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வெங்காயம் விற்பனை செய்யும் வியாபாரி ஈச்சர் வாகனம் மோதி பலி. ஈச்சர் லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம். காவல்துறையினர் விசாரணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த செட்டிபாளையம் பிரிவு பகுதியில் வெங்காயம் விற்பனை செய்யும் வியாபாரி பொன்னாபுரம் அடுத்த அங்கித் தொழுவைச் சேர்ந்த வெங்காய வியாபாரி விஜயகுமார் ( 43) ஈஸ்வரி இவர்களுக்கு செல்வகிரி மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார் இந்நிலையில் இரவு 9 மணி அளவில் விவசாயத்திற்கு பயன்படும் உர மூட்டைகளை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் அவரது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது,  இவரை கடந்து அதிவிரைவாக சென்ற (லாரி) கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

 பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கனரக லாரியை மடக்கிப் பிடித்தனர். கனரக வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த விஜயகுமாரை மீட்ட பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மருத்துவ மனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்..

 பின்னர் அவரது உடலை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தை சிறைபிடித்தது அப்பகுதியில் பரபரப்பு இதுகுறித்து காவல்துறையினர் கனரக வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலைய வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர், தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை வலை வீசி தேடி வருகின்றனர்..

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்