தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - முதல் பரிசை வென்ற தண்டர் 11's அணியினர்!

 

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த வாரம் 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தூத்துக்குடி சங்கரபேரியில் உள்ள SKC மைதானத்தில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 24 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன.

நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் போட்டித் தொடரை நடத்திய தூடி தண்டர் 11's அணியினர் முதல் பரிசையும், SKC அணியினர் 2வது பரிசையும், MSM அணியினர் 3வது பரிசையும் பெற்றனர்.

PL.செல்வம் நினைவுக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் சுரேஷ் (பில்லா பிளேடு அணி கேப்டன்), சிறந்த பவுலர் கணேஷ் (MSM அணி) மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் அனீஷ் (தூடி தண்டர் 11's அணி துணை கேப்டன்) தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த கிரிக்கெட் போட்டிகளை ஸ்ரீ நம்பையா குரூப்ஸ் தவசு இராமன் முன்னின்று நடத்தினார். பரிசுகளை  T. முத்துராமன் (ஹோட்ட்ல் கிருஷ்ணா, தூடி பைபாஸ்), LR. பாண்டியன் MJF (குருத்து டிரேடர்ஸ்) திரு. சிவாகர்,  திரு. அருண்குமார் ( ஸ்ரீ மகா லெட்சுமி குரூப்ஸ் தூத்துக்குடி) திரு. வடிவேல்ராஜா (கேப்டன் கிங் ஸடார் அணி, தூத்துக்குடி) ஆகியோர் வழங்கினர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்