மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?
மணிமுத்தாறு அருவியில் குளித்த நபருக்கு ஆபத்தான நோய் கிருமி தொற்று ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ராம்நகர் 5 ஆவது தெருவில் வசித்து வந்தவர் 50 வயதான ராமச்சந்தின், மனைவி பெயர் கோமதி. இவருக்கு ஷ்யாம் (23) , தாரிணி (14) என இரு குழந்தைகள் உள்ளனர். நிறுவனங்களுக்கு வரி ஆலோசகராக செயல்பட்டு வந்த இவர் கடந்த அக்டோபர் 10ம் தேதி குடும்பத்தினருடன் மணிமுத்தாறு அருவிக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு இரண்டு நாட்களாக தலைவலி இருந்து வந்த நிலையில் அக்டோபர் 15ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு நாட்களில் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் மாத்திரைகளை சாப்பிட்டு வந்த அவர், தொடர்ந்து காய்ச்சல், தலைவலி வரவே 17ம் தேதியன்று தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து காய்ச்சல் வந்து கொண்டே இருந்ததால் 19ம் தேதி மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் "வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் 5 நாட்களுக்கு பிறக...
.jpg)