பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி காலமானார்.

 

உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(வயது 100) மோடி காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28ந் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தனது தாயார் ஹீராபெனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி