சத்தியமங்கலம், திம்பம் மலைப்பாதை யில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயம் -

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 8 பேர்,கார் ஒன்றில் நேற்று ஜவுளி எடுப்பதற்காக,ஈரோட் டுக்கு சென்று கொண்டிருந்த னர், காரை அலெக்ஸ் பால் ராஜ் (வயது 42) என்பவர் ஓட்டிவந்தார். காரில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர்வந்தனர். சத்திய மங்கலம் அருகே, திம்பம் மலைப்பாதையில்,5 வது சுற்றில், மாலை 5 மணிஅளவில், கார் சென்றபோது திடீரென கார் நிலை தடுமாறி, அருகில்,ரோட்டோர மாக உள்ள 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் அங்குள்ள ஒருமரத்தின் மீது கார் மோதி கவிழ்ந்து நின்றது. இதனால் காருக்குள் இருந்தவர்களின் அழுகுரல் கேட்டு, அவ்வழியே சாலையில் பயணித்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த அங்கு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்


சத்தி அரசு மருத்துவமனயில், மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். விபத்தில் காயமடைந்த நபர்களில் 3 நபர் களுக்கு கூடுதலான காயம் ஏற்பட்டதால், காரில் பயணித்த அனைவரும், கோவை யில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு, மேல் சிகிச்சை க்காகசென்றனர்.   

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த,சத்திய மங்கலம் போலீசார், விபத்து குறித்து, விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்