கோவில்பட்டி - ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது.!

 


கோவில்பட்டி  அருகே நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை மாற்ற விண்ணப்பம் பதிவு ஏற்றம் செய்ய ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர்  பொன்ராஜா லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொன்ராஜா என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை மாற்றுவதற்காக கோவில்பட்டியை சேர்ந்த பாரதிசங்கர் என்பவர் நாலாட்டின்புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அந்த விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வதற்கு பொன்ராஜா, பாரதி சங்கரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பாரதிசங்கர் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் ஆலோசனைபடி பாரதி சங்கர் இன்று காலை ரசாயனம் தடவிய 5 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இளநிலை பொறியாளர் பொன் ராஜாவிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக பொன்ராஜாவை பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்