வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க செயின் பறிப்பு : 19 வயது இளைஞர் கைது! - இருசக்கர வாகனம் பறிமுதல்.!

 

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சித்திரை பாபு என்பவரது மனைவி சாரதா (40) என்பவர் கடந்த 24.01.2023 அன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து சாரதா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி, மத்தியபாகம் காவல் நிலைய காவலர்  செந்தில்குமார், தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி சந்திப்பு பகுதியில் இன்று (27.01.2023) ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் பாரத் (19) என்பதும், அவர் மேற்படி சாரதாவின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் பாரத்தை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1,40,000/- மதிப்புள்ள 7 பவுன் தங்க செயினையும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

 கைது செய்யப்பட்ட பாரத் என்பவர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு செயின் பறிப்பு வழக்கிலும், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு செயின் பறிப்பு வழக்கிலும் ஈடுபட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி