பஸ் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

 மாநகர பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலி, பேருந்து ஓட்டுநர் கைது. 

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி(48), பெயிண்டிங் ஒப்பந்த பணி எடுத்து செய்து வருகிறார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலை அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்து நிலையம் அருகே மாநகர பேருந்து நின்று கொண்டிருந்தது.

அதற்கு பின்னால் தடம் எண் 515 மாமல்லபுரத்திலிருந்து, தாம்பரம் வந்துள்ளது, முன்னால் பேருந்து நின்றிருந்ததால் வலது பக்கம் பேருந்தை திரும்பி சாலையில் சென்ற போது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மோதியதில் ரவி பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் தணிகைவேல்(44), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்