ஆறு அடி நீள புலியை அடிச்சு அசால்ட்டா விற்பனைக்கு கொண்டு வந்த வட மாநிலத்தவர்கள்... எந்த காட்டுல அடிச்சாங்கனு விசாரிக்குது சத்தியமங்கலம் வனத்துறை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில், பத்து வனச்சரகங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை வனத்துறையினருக்கு, கிடைத்த  தகவலின் அடிப்படையில், சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூரில், வட நாட்டைச் சேர்ந்த சிலர், டென்ட் அமைத்து தங்கி இருந்ததாக தெரிய வந்தது.


 வனத்துறையினர் அவர்களது டென்ட்டை அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது, அங்கு இரண்டு பேக்குகளில், சுமார் ஆறடிக்கும் மேலான நீளமுள்ள, புலித்தோல் மற்றும் புலி உடம்பின் பல்வேறு பாகங்கள் இருந்தது. 

உடனே அங்கிருந்த நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து, வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புலித்தோலையும் , அதன் உடலின் பல்வேறு பாகங்களையும் விற்பனைக்காக கொண்டு வந்தது ராஜஸ்தானைச் சார்ந்த ராம் சங்கர் வயது 50, பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் வயது 59,மங்கள் வயது 28, ரத்தனா வயது 40 என்பதும் தெரியவந்தது. 

மேற்படி நபர்களிடம் வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு, வருகின்றனர்.


 பின்னர்இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த, சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி கூறுகையில், மேற்படி நபர்கள் சத்தியமங்கலம் அருகே, அரசூரில் டென்ட் அமைத்து தங்கி இருப்பதாகவும்,.இன்று காலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இவர்கள் தங்கி இருந்த இடத்தில் சோதனை செய்த போது,ஒரு புலி தோல் மற்றும்,புலியின் நகம், பல் மற்றும் உடல் உறுப்புகள் விற்பனைக்காக கொண்டு வந்தது கண்டறியப்பட்டது என்றும், இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.மேலும் இறந்த புலி பெண் புலியா ?ஆண்புலியா? என்பதும், எத்தனை வயது புலி? என்பதும், புலியின் உடற்கூறு ஆய்வுக்குப் பின் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

இந்த புலி எந்த பகுதியில் வேட்டையாடப்பட்டது என்பது குறித்தும், இதில் தொடர்புடையவர்கள் யார்?யார்? என்பது குறித்த விவரங்கள்  இன்னும் தெரியவில்லையாம், தொடர் விசாரணைக்கு பின்தெரிய வரும் என்று வனத்துறை தெரிவித்து இருக்கிறது. 

புலிகள் காப்பக பகுதியான சத்தியமங்கலத்தில் புலித்தோல் மற்றும் அதன் பாகங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட செய்தி சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.சம்பவம் அறிந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பக திட்ட இயக்குநர்/ வனக்காப்பாளர் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சத்தியமங்கலத்தில் முகாமிட்டுள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!