திருப்பூர் தடகள சங்க செயற்குழுக்கூட்டம் -புதிய நிர்வாகிகள் தேர்வு

 திருப்பூர் தடகள சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நிகழ்வானது காங்கேயம் சாலையிலுள்ள, காயத்ரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவரும், திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவருமான ஆர்.பி.ஆர்.ஏ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

திருப்பூர் தடகள சங்கத்தின் நிர்வாக வசதிக்காக புதிதாக உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி சங்கத்தின் மூத்த துணைத்தலைவராக திருப்பூர், கிட்ஸ் கிளப் பள்ளிக்குழுமங்களின் சேர்மன்  மோகன் கே.கார்த்திக், துணைத்தலைவர்களாக சந்தீப் குமார், வெங்கடேசன், ஜெயப்பிரகாஷ், மதிவாணன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சங்கத்தின் பொருளாளராக  மணிவேல், இணைச் செயலாளர்களாக ஜெ.அழகேசன், நிரஞ்சன் மற்றும் ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் சங்கத்தின் கடந்தாண்டு செயல்பாடுகள் அறிக்கையாக வாசிக்கப்பட்டது. மேலும், சங்கத்தின் எதிர்கால திட்டங்கள், மற்றும் செயற்குழுக்கூட்டத்தின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்