மறுபடியும் தள்ளிப்போனது திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு! மார்ச் மாதத்திலாவது நடக்குமா?

சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. 


(அலகுமலை வாடிவாசல் - பைல் படம்)
----------------------------------------------------------------------------------------

திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலை காளைகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.  அலகுமலை ஜல்லிக்கட்டில் வழக்கமாக 600க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள். பரிசுகளும் ஏராளமாக வழங்கப்படும்.

 இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் அலகுமலை மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஜனவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஜல்லிக்கட்டு வாடிவாசல், கேலரி அமைப்பதற்கான பூமி பூஜையும் நடபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடம் குறித்து அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், பிப்ரவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் ஜல்லிக்கட்டு நடத்தும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதால் 19 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறாது என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகள் பாதுகாப்பு சங்க தலைவர் பழனிசாமியிடம் கேட்டபோது, ‘ ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறது. இடம் தேர்வானதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.  அலகுமலையில் 3 இடங்களை தேர்வு செய்து இருக்கிறோம். இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனும்தி கிடைத்ததும் ஜல்லிக்கட்டு நடைபெறும். பிப்ரவரி 19 - ல் நடத்த இயலாது. மார்ச் மாதத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். என்றார்.
 
 மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து, அனுமதி பெற்று அதன்பிறகு ஏற்பாடுகளை செய்து தான் ஜல்லிக்கட்டு நடத்த இயலும். இதனால் இந்த ஆண்டு அலகுமலை ஜல்லிக்கட்டு நடக்குமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. எப்படியாவது நடத்த வேண்டும். என்று ஜல்லிக்கட்டுஆர்வலர்கள் தெரிவித்தனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!