மங்களூர் குக்கர் குண்டு விசாரணைக்காக திருப்பூரில் இரண்டு பேரை அழைத்து சென்ற என்.ஐ.ஏ., அதிகாரிகள்...

திருப்பூர் மாநகரில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை - இருவரை விசாரணைக்காக பெங்களூர் அழைத்துச் சென்றுள்ளனர்

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகருக்குட்பட்ட ராம் காலனி  மற்றும் நல்லூர் மண்டலத்திற்குட்பட்ட திருநகர் உள்ளிட்ட இருவேறு இடங்களில் என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டனர் . 

ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் இருவர் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள், சோதனை முடிவில் ராம் காலனியில் உள்ள முகமது ரிஸ்வான் மற்றும் நல்லூர் சிறுநகரைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா ஆகிய இருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்காக இருவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்