கார் குண்டு வெடிப்பு பின்னனியில் யார்.. யார்?...சென்னை, கோவை, நெல்லையில் இன்று என்.ஐ.ஏ., சோதனை!

 கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட பயங்கர வெடி குண்டு மூலப் பொருட்கள் வெடித்து விபத்துக்குள்ளானது. பலரும் கார் சிலிண்டர் வெடிப்பு என்று கூறி வந்த நிலையில், அது சதித்திட்டத்தின் பின்னணி என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 


 இந்த குண்டு வெடிப்பில் ஜமீசா முபின் என்ற வாலிபர் பலியானார். ஜமேசா முபீன் பின்னணி மற்றும் அவர்களின் சகாக்கள் உள்ளிட்டவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் முகமது தல்கா , முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டோடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். 

 இந்த வழக்கை கையில் எடுத்த என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே கோவை வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் ஜமீஷா முபீனின் மனைவி மற்றும் முன்னாள் கைதான நபர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆவணப்படுத்தி இருந்தனர். 

அதன் அடிப்படையில் இன்று காலை சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர். கோயம்புத்தூரை பொறுத்தவரையில் உக்கடம், குனியமுத்தூர் ஆத்துப்பாலம், கரும்புக்கடை, வசந்தம் நகர் உள்பட பல இடங்களில் பல நபர்களின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்