இந்திராசுந்தரம் தொண்டுநிறுவனம் சார்பில் 26 சாதனை பெண்களுக்கு விருது

திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தொடர்ந்து நான்காம் ஆண்டாக மகா திறன் மங்கை என்ற தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள எம்.கே.எம் ரிச் ஹோட்டலில் நடைபெற்றது. 

முன்னதாக மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் சுந்தரம் அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர். இந்நிகழ்சியை திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவர் இந்திராசுந்தரம் தலைமையேற்று நடத்தினார். இதில் திருப்பூர் தெற்கு காவல் துணை ஆணையர் வனிதா, திருப்பூர் மாவட்டம் அவிநாசி கோட்ட கலால் அலுவலர் ராகவி, பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை விருந்தினர்களாகவும், கிட்ஸ் கிளப் பள்ளி குழும தலைவர் மோகன் கார்த்திக், நடிகர் அருண் குமார் ராஜன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இரத்த தானம், தாய்ப்பால் தானம், வாழ்நாள் சாதனைகள், விளையாட்டு, பறை இசை போன்ற பல துறைகளில் சாதனைபடைத்த ஒரு திருநங்கை உட்பட 26 சாதனைப் பெண்களுக்கு மகா திறன் மங்கை விருதுகள் வழங்கினர். இந்நிகழ்வில் தொழில் அதிபர்கள், அரசு அலுவலர்கள், சமூக சேவகர்கள் என பலர் கலந்து கொண்டனர்...

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்