விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி

திருப்பூர் விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆர்.மீனா தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா முன்னிலை வகித்தார்.


 கல்வியாளர் வெங்கட் ராஜா, வழக்கறிஞர் மோகன், 3- மன்றத் தலைவர் சி. கோவிந்தசாமி, கவுன்சிலர் ஜெயசுதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் 1 வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஆடல், பாடல், கதை, கணித விளையாட்டு, சொல்லட்டை மூலம் வாசித்தல் (தமிழ்/ ஆங்கிலம்) போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். 


விழாவில் எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உதயா,ராமன்,  லட்சுமி, தெய்வானை, அரியநாச்சி, மதன், கவிதா, ராசாத்தி, சாந்தி உள்ளிட்ட மற்றும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் என்னும் எழுத்தும் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்