கச்சத்தீவு திருவிழா நிறைவு... ராமேஸ்வரம் திரும்பிய பயணிகள்

 *கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற திரு பயணிகள் திருப்பயத்தை முடித்துவிட்டு மீண்டும் ராமேஸ்வரம் துறைமுகம் வந்தடைந்தனர்

இலங்கை இந்தியா இருநாட்டு மக்களின் நல்லுறவை ஏற்படுத்தும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு 2023 மார்ச் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது 

நடைபெற்ற திருவிழாவில் தமிழகத்திலிருந்து 2408 பக்தர்கள் 72 படகுகள் மூலமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருப்பயத்திற்கு சென்றனர் கோவிலில் நேற்று பிப்ரவரி 3ஆம் தேதி சிறப்பு திருப்பலி மற்றும் சிலுவைப்பாதை தேர்பவனி நடைபெற்றது அதனை தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற சிறப்பு திருப்பல்லியில் ஏராளமான இலங்கை இந்திய பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர் அதனை தொடர்ந்து விழா நிறைவு பெற்றது 

வந்திருந்த இலங்கை இந்திய பக்தர்கள் அனைவருக்கும் இலங்கை அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது அதன் பின் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னர் கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை பக்தர்களும் இந்திய பக்தர்களும் கச்சத்தீீவில் இருந்து புறப்பட்டனர் 

இலங்கையில் இருந்து இந்தியா புறப்பட்ட கட்சாதீவு பயணிகள் ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு இன்று மதியம் வந்தடைந்தன சுங்கத்துறை அதிகாரிகள் தமிழக காவல்துறை அதிகாரிகள் கடலோர காவல் குழு அதிகாரிகள் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னர் அவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!