திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்... விளையாட்டுப்போட்டிகளில் பெண்கள் பங்கேற்பு

திருப்பூர் அதிமுகவினர்  மகளிர் தினத்தை முன்னிட்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டும்,  திருப்பூரில் விளையாட்டு போட்டிகளை நடத்தி, கேக் வெட்டி, பெண்களுக்கு அசைவ விருந்து  கொடுத்து கோலாகலமாக கொண்டாடினார்கள்.

உலகம் முழுக்க மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில கே.எஸ்.சி., ஸ்கூல் ரோட்டில்உள்ள  அந்த கட்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிமுக கட்சியை சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் உள்பட 300 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்..  அதிமுக மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில் மெகா சைஸ் கேக் வெட்டி வழங்கப்பட்டது.   கட்சிஅலுவலகத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற்து. கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன், லக்கி கார்னர், பலூன் உடைக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளையாடி பரிசுகளை பெற்றனர் . இந்த போட்டிகளை முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் நடத்தி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர்  வரவேற்றார்.  போட்டியின் முடிவில் அனைவருக்கும் அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. இதில் சிக்கன் கிரேவி, நாட்டுக்கோழி கிரேவி, இட்லி, தோசை, ஆம்லெட், அரிசிம் பருப்பு சாப்பாடு  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, ஹரிஹரசுதன், வேலுமணி, பாசறை சந்திரசேகர் யுவராஜ், வக்கீல் முருகேசன், ஆண்டவர் பழனிசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற தேவராஜ், மோட்டார் பாலு, மதுரபாரதி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள்  பலர் பங்கேற்றனர்.   

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்