ஆற்றல் அறக்கட்டளை சார்பில் 10 ரூபாய் உணவகம் தொடக்கம்

 ஈரோடு பகுதியில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் புதிய உணவகம் செயல்பாட்டில் உள்ளது.

 


இன்று முதல் பத்து ரூபாய் கட்டணத்தில் பசியாற விரும்புவோருக்கு ருசியான தரமான உணவு வழங்கப்படும். வாரம் 7 நாட்களும் காலை மதியம் இரவு என மூன்று வேளைகளிலும் உனவு கிடைக்கும்.  அளவில்லா உணவு பரிமாற ஏற்பாடு செய்துள்ளோம் தெரிவித்துள்ளனர்.

 இதற்காக சிறந்த சமையல் கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் ஆறு பேர் இந்த பணியில் முழு நேரமாக ஈடுபடுகின்றனர். ஒரே நேரத்தில் 60 பேர் அமர்ந்து உணவு அருந்தலாம். காலை இட்லி சாம்பார் மற்றும் சட்னி எட்டு மணி முதல் 10 மணி வரையிலும் வழங்கப்பட உள்ளது. 

 மதிய உணவாக 12 மணி முதல் 2 மணி வரை  சாதம் சாம்பார், பொரியல் மோர். மற்றும் ஊறுகாய் வழங்கப்பட உள்ளது.   இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை  இட்லி சாம்பார் மற்றும் சட்னி  பரிமாறப்படும். 

தேவையான பொதுமக்கள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  பத்து ரூபாய் செலுத்தினால் போதும். போதிய உணவுகள் பெற்று சாப்பிடலாம். 

இதுகுறித்து ஆற்றல் அசோக்குமார் கூறியதாவது: 

ஆற்றல் அறக்கட்டளை கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அரசு பள்ளிகள் மேம்படுத்துதல் சமுதாயக்கூடங்கள் கட்டுதல்  ஆலயங்கள் புதுப்பித்தல் போன்ற சேவைகளை செய்து வருகிறோம். 

கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்களை கௌரவித்தல், கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளித்து வருகிறோம்.

எமது அறக்கட்டளை இவ்வாறு  பல்வேறு பணிகளை கடந்த மூன்று வருடங்களாக செய்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

 இதன் தொடர்ச்சியாக பசியாற விரும்பும் மக்களுக்கு பத்து ரூபாய் கட்டணத்தில் உணவகத்தை இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அசோக் குமார் தெரிவித்தார்.

 நிகழ்ச்சியில்  பி பி வி ஸ்கூல் டாக்டர்  எல் எம் ராமகிருஷ்ணன்,சி கே சரஸ்வதி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம், அக்னி நிறுவன தலைவர் தங்கவேல், இந்து கல்வி நிலையம் கே கே பாலு. மற்றும் செங்குட்டுவன் ஒளிரும் பவுண்டேஷன். சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் விநாயகம் உட்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். ஈரோட்டின் முக்கிய பிரமுகர்கள் ஆற்றல் அறக்கட்டளை செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்தினார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!