திண்டுக்கல் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி

 திண்டுக்கல்  ஒட்டன்சத்திரம் அருகே வேடசந்தூர் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் தனியார் பள்ளி அருகே பழனி கோவிலுக்கு சென்று இருசக்கர வாகனத்தில் திரும்பிய இருவரும் ,வேடசந்தூர் சாலையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் இரவு 10:45மணிக்கு நேருக்கு நேர் அதிபயங்கரமாக மோதிக்கொண்டனர் ..இந்த விபத்தில் பழனி கோயிலுக்கு சென்று வந்த பாளையம் சீத்த பட்டியை சேர்ந்த ரத்தினம் ..அதே பகுதியைச் சேர்ந்த சேகர் ..மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நடுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்த சுதாகர். துரைராஜ்.ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலே பலியாயினர்.

அதேபோல் அந்த இடத்தில் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அந்த இடத்தில் நின்றிருந்த கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் படுகாயமடைந்தார். போலீசார்

பலியான நான்குபேரை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்பு படுகாயம் அடைந்த வரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ...

சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்